கிரிக்கெட்டை கட்டியெழுப்பும் முன், ஆளும் தரப்பு ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும் – சஜித்

கிரிகெட் விளையாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகளை ஆராய்ந்து, முறையான பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு 14 நாட்களுக்கு தடையுத்தரவு பிறப்பித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும்,
இவ்வாறு பயணிக்க முடியாதல்லவா என்றும்,இந்த நிலைமையின் கீழ் இலங்கை கிரிக்கெட்டினால் உலகை வெல்ல முடியுமா என்றும், அரசாங்கத்திற்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் விளையாட்டுத்துறை அமைச்சரும் இரு வேறு கருத்து நிலைப்பாட்டிலிருந்து செயற்படுவதால் இது மற்றுமொரு நெருக்கடி நிலையை உருவாக்குகின்றது என்றும்,ஜனாதிபதி ஒரு பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார் என்றும்,விளையாட்டுத் துறை அமைச்சர் ஒரு தீர்மானத்தை மேற்கொள்கிறார் என்றும், அந்த அதிகாரம் விளையாட்டுத் துறை அமைச்சருக்குள்ளது என்றும், அதற்கமைவாகவே அவர் செயற்படுகிறார், இடைக்கால குழுவிற்குள் பிரச்சினைகள் காணப்பட்டால் அது வேறு கதை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இவ்வாறு இருந்தால் எப்படி கிரிக்கெட்டை கொண்டு செல்லாம் என கேள்வி எழுப்பிய அவர்,இது தொடர்பாக அறிக்கை ஒன்று தேவை என்றும்,விளையாட்டுத்துறை அமைச்சர் உடனடியாக பாராளுமன்றத்தில் இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்றும், விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானம் தொடர்பாக ஆராய்வதற்கு அமைச்சரவையில் கூட்டத்தில் உப குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றும், இது நகைச்சுவையானது என்றும், குழு நியமிப்பது சூதாட்டமாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்புவது ஓர் கூட்டு நடவடிக்கை என்பதாக கருதி எதிர்க்கட்சியாக ஆதரவளிக்க தயார் என்றும்,கிரிகெட்டில் அரசியல் இல்லாது செய்யப்பட வேண்டும் என்றும்,தானும் ஒரு கிரிக்கெட் வீரர் என்றும், கிரிகெட் தொடர்பில் தனக்கு பெரும் விருப்பமுள்ளது என்றும், நடப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும்,இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் முறையான கருத்தை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எந்த சூழ்நிலையிலும் தாம் கனம் நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு சவால் விடுக்கப்போவதில்லை என்றும்,அரசாங்கம் எடுத்துள்ள முரண்பட்ட முடிவுகளால், கிரிக்கெட் விளையாட்டு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஊழல் நிறைந்த கிரிக்கெட் நிர்வாகத்தை பாதுகாக்க அரசாங்கத்தில் உள்ள சிலர் முயற்சித்து வருவதாகவும்,எனவே, தனிப்பட்ட நட்பைக் காட்டிலும் பொதுக் கருத்துடன் செயல்படுமாறு அழைப்பு விடுக்கப்பதாகவும்,இதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் அனைவருடனும் இணைந்து 225 பேரினதும் ஒரு நிலைப்பாட்டிற்கு அமைவாக கிரிக்கெட்டை முன்கொண்டு செல்வதற்கு இணக்கப்பாடொன்றை ஏற்படுத்துவோம் என்றும், இயலுமான ஆதரவை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இன்று (07.11) பாராளுமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

Social Share

Leave a Reply