வவுனியாவில் தம்பதியினர் சடலமாக மீட்பு!

வவுனியா, சேட்டகுளம் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவர்களது கடையின் பின்புறம் உள்ள அறையில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்ட்டுள்ளதாகவும், உயிரிழந்த கணவருக்கு 78 வயது மற்றும் மனைவிக்கு 68 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட தம்பதியினரின் மகன் இன்று(30.11) காலை அவர்களுக்கு விற்பனையகத்திற்கு சென்ற வேளையில், பெற்றோரை சடலமாக கண்டு, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

அவர்களிடம் இருந்த சுமார் 5 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Social Share

Leave a Reply