இந்தியா 19 வயதிற்குட்பட்ட மற்றும் ஆப்கானிஸ்தான் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணத்தின் முதலாவது போட்டியாக இன்று (08.12) ICC அக்கடமி, டுபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜம்சித் சத்ரான் 43(75) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அர்ஷின் குல்கர்னி, ராஜ் லிம்பனி ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், நவன் திவாரி 2 விக்கெட்களையும், முருகன் அபிஷேக், முஷீர் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. இதில் அர்ஷின் குல்கர்னி ஆட்டமிழக்காமல் 70(105) ஓட்டங்களையும், முஷீர் கான் ஆட்டமிழக்காமல் 48(53) ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் 19 வயதிற்குட்பட்ட மற்றும் நேபாளம் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் ஆசிய கிண்ணத்தின் இரண்டாவது போட்டியாக ICC அக்கடமி 2, டுபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது
முதலில் துடுப்பாடிய நேபாளம் அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்றது. இதில் உட்டம் மகர் 51(76) ஓட்டங்களையும், டிபேஷ் கண்டெல் 31(59) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் சீஷான் 6 விக்கெட்களையும், அமீர் ஹசன் 2 விக்கெட்களையும், உமைத் ஷா, அலிப் அஸ்பன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 26.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. இதில் அசன் அவிஸ் ஆட்டமிழகாமல் 56(62) ஓட்டங்களையும், சாட் பைக் 50(56) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் குல்சன் ஜா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.