இந்தியாவின் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 15 ம் திகதி வரை தினசரி பாதிப்பு 9 வரை பதிவான நிலையில் இன்று ஒரே நாளில் 16 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தற்போது சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 50 ஐ அண்மித்துள்ளது.
இந்நிலையில் தினசரி கொரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கையினை அந்நாட்டு பொது சுகாதாரத் துறை அதிகரித்துள்ளது.
இதன்படி, தினசரி பரிசோதனை எண்ணிக்கை 300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.