போலி விசாக்கள், அனுசரணை கடிதங்கள் தயாரித்த நிறுவனம் கண்டுபிடிப்பு!

பன்னல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நிலக்கீழ் அலுவலகம் நடத்தி வந்த இருவரை கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட சுற்றிவளைப்பு பிரிவின் அதிகாரிகள் குழு மற்றும் கட்டுநாயக்க குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளன.

மேலும், இவர்களிடமிருந்த போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், விசாக்கள் மற்றும் வெளிநாட்டு அனுசரணை கடிதங்கள் மற்றும் அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த அச்சகத்தில், வெளிநாட்டு உயர்தர அச்சு உபகரணங்கள், பல்வேறு நாடுகளின் உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் இலங்கை குடிவரவு திணைக்களம், வாட்டர்மார்க் பதிவு செய்யக்கூடிய பிரிண்டர்கள் மற்றும் பல அதிநவீன இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில பணியாற்றி வந்ததாக சந்தேகிக்கப்படும் 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply