யுத்த பூமியில் நான்கு குழந்தைகளை பெற்ற காசா பெண்!

இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து தப்பித்து காசா பகுதியில் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு காசாவில் வசிக்கும், 28 வயதான இஸ்மான் அல்-மஸ்ரே என்ற குறித்த கர்பிணிப் பெண், இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக, தனது கணவருடன் தெற்கு காசாவிற்கு தப்பிச் சென்ன்றுள்ளார்.

இந்நிலையில், இவர் நேற்று (28.12) இரண்டு பெண் குழந்தைகளையும் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

தெற்கு காசாவில் மருத்துவமனை வசதிகள் இல்லாத நிலையில், ஒரு பள்ளி கட்டிடத்தில், குறைந்த வசதிகளுடன் இயங்கும் மருத்துவ மையத்திலேயே இந்த பிரசவம் இடம்பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply