போதைப்பொருள் சுற்றிவளைப்பின்போது கிடைத்த வாகன இலக்க தகடுகள்!

தம்புள்ளை பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அடங்கிய பையொன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இது பிரபல வர்த்தகர்கள் சிலருக்கு சொந்தமானது என சந்தேகிப்பதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தப்படும் இடமாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில், தம்புள்ளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இடம் பல்வேறு போதைப்பொருள் பாவனைக்கான இடம் என கண்டுபிடிக்கப்பட்டதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த இடத்தில் இருந்து இதற்கு முன்னரும் பாரியளவிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இலக்கத் தகடுகள் தொடர்பான கேள்விகளின் போது, ​​அவர்கள் சரியான பதில்களை வழங்கத் தவறியதால், விசாரணை கடுமையாக்கப்பட்டுள்ளது.

போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்தல் மற்றும் திருடுதல் போன்றன குற்றச்செயல்களை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டல் அமைந்துள்ள இடத்திற்கு அண்மையில் உள்ள பல வீடுகளையும் பொலிஸார் சோதனையிட்டதுடன், அதன்போது சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Social Share

Leave a Reply