கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கிளிநொச்சி அலுவலகத்தின் முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, “ எமது உறவுகள், காணி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தாத ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுகிறோம்’’ என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
தமக்கு நீதி தராத தரப்புடன் நல்லிணக்க பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.