வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான ரயில் பாதை இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான வீதி அபிவிருத்திக்காக 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்தில் இருந்து காங்கசந்துறை வரை மாத்திரமே இன்று முதல், ரயில் சேவைகள் இடம்பெறும் என என்.ஜே.இண் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு ரயிலிற்கு மேலதிகமாக மட்டக்களப்பு ரயிலையும் இந்த வருடம் சீர்செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய ரயில் சேவைiயினை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.