எல்பிட்டிய ஓமத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்பிட்டியவிலிருந்து ஓமத்தை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் நபரே பயணித்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
ஓமத்த சர்வோதய கந்தவில் வசிக்கும் 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.