நாடு முழுவதும் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்..!

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் வேலைத்திட்டத்தினை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் களுத்துறை மாவட்டத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார்.

உலகலாவிய ரீதியில் டிஜிட்டல் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளும் டிஜிட்டல் உலகில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் இலங்கையும் அதனை நோக்கிச் செயற்;பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply