புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், 80 மற்றும் 90 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் ஈழ போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியவர்களில் முக்கியமான ஒருவர் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கெப்டன் விஜயகாந்த் அடக்கம் செயப்படுள்ள சென்னை கோயம்பேடு பகுதியில் அமையப்பெற்றுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வட கிழக்கு மக்கள் சார்பாக அஞ்சலி செலுத்தியதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜயகாந்தின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமாயின் அவரது ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்கள் மற்றும் ஈழ தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு வலு சேர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.