கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 1,024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் போதைக்கு அடிமையான 8 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 45 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட நடவடிக்கையின்போது பின்வரும் 227 கிராம் ஹெராயின், 168 கிராம் ஐஸ், 8 கிலோ 40 கிராம் கஞ்சா, 13,892 கஞ்சா செடிகள், 227 கிராம் மாவா மற்றும் 647 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply