தொடரை சமன் செய்யுமா இலங்கை அணி ? – நாணய சுழற்சியில் வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் சர்வதேச போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி ஆரம்பமாகியுள்ளது. பங்களாதேஷின், சட்டக்ரூம் சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப்படி பகல் 2.00 மணிக்குப் போட்டி ஆரம்பமாகியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. செய்துள்ளது.

தொடரின் முதற் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

குறித்த போட்டியின் இரண்டாவது இனிங்ஸின் போது மைதானத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவு(Dew) பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது, இலங்கை அணிக்கு கைகொடுக்கவில்லை.

ஆகவே, இன்றைய போட்டியின் போதும், மைதானத்தில் பனிப்பொழிவு காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதனால், நாணய சுழற்சி போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில், தொடரைச் சமநிலைப் படுத்துவதற்கு இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பது கட்டாயம். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இதுவரையில் 55 ODI போட்டிகளில் மோதியுள்ளதுடன், அவற்றுள் 42 போட்டிகள் இலங்கை வெற்றியீட்டியுள்ளது.

இருப்பினும், பங்களாதேஷ் அணி 11 போட்டிகளின் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளதுடன், அவற்றுள் 7 வெற்றிகள் பங்களாதேஷினுள் பெறப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஆகவே இன்றைய போட்டியும் இலங்கை அணிக்கு சவாலாக அமையும்

Social Share

Leave a Reply