குறைந்தபட்ச ஊதிய தொகையில் மாற்றம்…

தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை 17,500 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்திற்கமைய, தேசிய குறைந்தபட்ச ஊதியம் 12,500 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் நியமிக்கப்பட்ட குழு குறைந்தபட்ச ஊதியத்தை 5,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. 

500 ரூபாவாக காணப்பட்ட தேசிய குறைந்தபட்ச தினசரி ஊதியமும் 200 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. 

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Social Share

Leave a Reply