20 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தடுப்பூசிகளினதும் இரண்டாவது டோஸினை பெற்றுக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸினைப் பெற்றுக்கொண்ட ஒருமாத காலத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று (19/11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை 16 – 20 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய அதிகாரி அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.