கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.