தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு

2024ம் ஆண்டிற்கான மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடருக்கான தகுதிகாண் சுற்றில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது. 

இம்முறையும் இலங்கை மகளிர் அணிக்கு சமாரி அதபத்து தலைமைத்தங்கவுள்ளார். 

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவினால் 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் குழாமிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

2024ம் ஆண்டிற்கான மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் அபு தாபியில் எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் மே மாதம் 7ம் திகதி வரை நடைபெறவுள்ளன. 

இலங்கை குழாம் – சாமரி அதபத்து (அணித் தலைவி), விஷ்மி குணரத்ன, நிலாக்‌ஷி டி சில்வா, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, ஹசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரணவீர, அச்சினி குலசூரிய, ஹன்சிமா கருணாரத்ன, காவ்யா கவிந்நிதி, இனேஷா பெர்ணான்டோ, சுகந்திகா குமாரி மற்றும் சஷினி கிம்ஹானி 

Social Share

Leave a Reply