மட்டக்களப்பில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி முதலைகள் வருகை தருவதால் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாத போதிலும் முதலையொன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் குறித்த முதலையை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.