வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அதிகளவு கட்டணம் அறவிடும் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகளை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகள் அதிகளவு கட்டணம் அறவிடுகின்றமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறித்த வாகன சாரதிகளை அடையாளம் காண்பதற்காக சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.