ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது பங்காளி கட்சிகளுக்கு எவ்வாறு கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அறிவுரை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செல்லமுத்து என்ற நபரும் அவரது மகன்களும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை புஸ்ஸல்லாவையில் தாக்க முயற்சித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, நேற்று(22.04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் தொழிற்சங்க போராட்டமா அல்லது ரவுடித்தனமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யுமாறும் வேலுகுமாரிடம் தெரிவித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.