லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் கொழும்பில் நடைபெற்று வருகின்றது. இதுவரை ஏலத்தில் 55 வீரர்கள் அணிகளினால் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களில் மதீஷ பத்திரன அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளார். கொழும்பு, காலி, தம்புள்ளை அணிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவியது. 120,000 டொலருக்கு காலி அணி அவரை வாங்கிய போதும், கொழும்பு அணி ரைட் டு மட்ச் முறை மூலமாக அவரை வாங்கிகொணடது. இசுரு உதான 100,000 டொலருக்கு காலி அணியினால் வாங்கப்பட்டார். அவருக்கு அடுத்த படியாக தஸூன் சாணக்க 85,000 டொலருக்கு கண்டி அணியினால் கொள்வனவு செய்யப்பட்டார்.
வெளிநாட்டு வீரர்களில் ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் கரீம் ஜனட் காலி அணியினால் 80,000 டொலருக்கு வாங்கப்பட்டுள்ளார். வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு அதிக தொகை வழங்கப்பட்டுள்ளமை இவருக்கே.
19 வயது வீரரான கருக்க சங்கீதத்தை வாங்குவதற்கு அணிகள் கடும் போட்டி போட்டன. அவர் 5000 டொலரில் ஆரம்பித்து 20,000 டொலருக்கு கொழும்பு அணியால் வாங்கப்பட்டார். 19 வயதான மற்றுமொரு வீரரான மால்ஷா தருப்பதி 25,000 டொலருக்கு காலி அணியினால் வாங்கப்பட்டார். யாழ் அணி இவரை வாங்குவதற்கு கடும் பிராயத்தனம் காட்டியது.
யாழ் அணி அசித்த பெர்னாண்டோவை ரைட் டு மட்ச் முறை மூலமாக காலி அணியிடமிருந்து 40,000 டொலருக்கு வாங்கிக்கொண்டது.
இதுவரையான ஏலத்தில் பத்தும் நிஸ்சங்க வாங்கப்படவில்லை. இலங்கை அணியின் முக்கிய வீரராகவும், அண்மைக்காலத்தில் சர்வதேச அரங்கில் ஓட்டங்களை அள்ளிக்குவித்து வரும் இவரை எந்த அணியும் முயற்சிக்காமை ஆச்சரியமே. குஷல் ஜனித் பெரேராவும் எந்தவொரு அணியினாலும் வாங்கப்படவில்லை.
166 வீரர்களில் இருந்தே இந்த வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் அணி 11 வீரர்களையும், கண்டி அணி 9 வீரர்களையும், கொழும்பு 13 வீரர்களையும், தம்புள்ள அணி 10 வீரர்களையும், காலி அணி 12 வீரர்களையும் கொள்வனவு செய்துள்ளன.
ஜப்னா கிங்ஸ் – ரிலீ ரொசோவ், பேபியன் அலன், தனஞ்சய டி சில்வா, ப்ரமோட் மதுஷான், ஜேசன் பெஹ்ராண்டோப், அசித்த பெர்னாண்டோ, விஷாட் ரந்திக, லஹிரு சமரக்கோன், எஷான் மலிங்க, அலெக்ஸ் ரோஸ், அஹான் விக்ரமசிங்க
பி லவ் கண்டி – அஷேன் பண்டார, டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, ரமேஷ் மென்டிஸ், திமுத் கருணாரட்ன, மொகமட் ஹஸ்னைன், பவன் ரத்நாயக்க, சமத் கோமஸ், சத்துரங்க டி சில்வா
கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் – சாமிக்க குணசேகர, டுனித் வெல்லாலஹே, ரஹ்மானுள்ளா குர்பாஸ், டஸ்கின் அஹமட், அஞ்சலோ பெரேரா, ஷெவோன் டானியல், பினுர பெர்னாண்டோ, கருக்க சங்கீத், மதீஷ பத்திரன, ஷெகான் பெர்னாண்டோ, கவின் பண்டாரா, இசித்த விஜயசுந்தர, முஹமட் வசீம்
தம்புள்ள தண்டெர்ஸ் – இப்ராஹிம் ஷர்டான், லஹிரு உதார, அகில தனஞ்செய, தனுஷ்க குணதிலக, இப்திகர் அஹமட், நுவனிது பெர்னாண்டோ, நுவான் பிரதீப், நுவான் பிரதீப், ரனேஷ் சில்வா, சொஹான் டி லிவேரா, கரீம் ஜனட்
கோல் மார்வல்ஸ் – ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, லஹிரு குமார, பிரபாத் ஜெயசூரிய, ஷோன் வில்லியம்ஸ், ஷகூர் கான், மால்ஷா திருப்பதி, மொஹமட் ஷிராஸ், இசுரு உதான, தனஞ்சய லக்ஷன், சதீஷ ராஜபக்ஷ
ஏற்கனவே அணிகள் தங்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் புதிதாக கையொப்பமிட்டு ஏலமின்றி வாங்கிய வீரர்கள் விபரம்
ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், அஷ்மதுல்லா ஓமர்ஷாய், நூர் அஹமட்
கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் – சாமிக்க கருணாரட்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, நிபுன் தனஞ்சய, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ்
தம்புள்ள தண்டேர்ஸ் – டில்ஷான் மதுஷங்க, நுவான் துஷார, டுஸான் ஹேமந்த, இப்ராஹிம் ஷர்டான், முஸ்டபைஸூர் ரஹ்மான்
கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, லசித் க்ரூஸ்புள்ளே, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ்,
பி லவ் கண்டி – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், டுஸ்மந்த சமீர, கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், கைல் மேயெர்ஸ்
ஒவ்வொரு அணியும் குறைந்தது 20 வீரர்களையும் கூடுதலாக 25 வீரர்களையும் வாங்கலாம்.
இடைவேளையின் பின்னர் மீண்டும் ஏலம் தொடரவுள்ளது.