ரஷ்ய – உக்ரைன் போருக்கு இலங்கையிலுள்ள ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்களை அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவரும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரான மேஜர் வத்தளையிலும் அவரது மனைவி பொரளையிலும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்தன் பின்னர் குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரது மனைவி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.