குணதிலக்க ராஜபக்ச மீது தாக்குதல் – வாக்குமூலம் பதிவு

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச மீது மஹிந்தானந்த அளுத்கமகே தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவின் மகன் நிலுபுல் ராஜபக்ச செய்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் தாக்குதலுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்
குணதிலக்க ராஜபக்சவின் கால் உடைந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply