விமானத்தில் பயணித்த மலாவியின் துணை ஜனாதிபதி சவ்லோஸ் சிலிமா மற்றும் அவரது மனைவி உட்பட 09 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
Chikangawa மலைத்தொடரில் பயணித்துக்கொண்டிருந்த விமானம் வீழ்ந்து மாயமானது.
வடக்கு மலாவியின் விபத்து இடம்பெற்ற மலைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முயற்சிக்கு பிறகு இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் தேசிய துக்க தினமாக மலாவி ஜனாதிபதி Lazarus Chakwera, பிரகடனப்படுத்தியுள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக, விமானத்தில் இருந்த அனைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்” என்று ஜனாதிபதி அலுவலகம் இன்று (11.06) அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டின் தலைநகர் லிலோங்வேயிலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம் நேற்று (10) காலை விபத்திற்குள்ளானது.
மலாவியில் அடுத்த அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தத் தேர்தலில் சிலிமா வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.