சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றமை, பொருளாதார சீர்திருத்தங்களை முன்னோக்கி கொண்டு செல்வதில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும் என வெளிவிவகார அமைச்சர் ‘X’ தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் 2வது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், இலங்கை மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பிற்கு சான்றாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனுடாக இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கவுள்ளது.