LPL – காலி அணியை கட்டுப்படுத்திய தம்புள்ளை

கோல் மார்வல்ஸ், மற்றும் தம்புள்ளை சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை சிக்சேர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய காலி அணி அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியான துடுப்பாட்டம் மூலம் நல்ல ஆரம்பத்தை பெற்றது. நிரோஷன் டிக்வெல்ல 07(10) ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 38(26) ஓட்டங்களோடு ஹேல்ஸ் ஆட்டமிழந்தார். சிறிய இடைவெளியில் பானுக்க ராஜபக்ஷ 01(05) ஓட்டத்துடன் ஆட்டமிழக்க காலி அணியின் தடுமாற்றம் ஆரம்பமானது. ரிம் செய்பேர்ட் 13(14) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜனித் லியனகே 13(14) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டுவைன் பிரட்ரோரியஸ் 16(12) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஷகான் ஆராச்சிஹே 15(12) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இசுரு உதான 02(04) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

கோல் மார்வல்ஸ் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

மொஹமட் நபி 4 ஓவர்களில் 14ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களையும், டுஸான் ஹேமந்த 4 ஓவர்களில் 19 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களையும், டில்ஷான் மதுசங்க 4 ஓவர்களில் 19 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். சமிந்து விக்ரமசிங்க 01 ஓவர் பந்துவீசி 09 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். நுவான் துஷார 4 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். நுவான் பிரதீப் 4 ஓவர்களில் 42 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார்.

காலி அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளோடு 8 புள்ளிகளைப் பெற்றுள்து. தம்புள்ளை அணி 5 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளோடு காணப்படுகிறது. இந்த நிலையில் தம்புள்ளை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

யாழ் மற்றும் காலி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளன. கண்டி. தம்புள்ளை, கொழும்பு ஆகிய மூன்று அணிகளும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்புகளுடன் காணப்படுகின்றன.

நடைபெறும் இந்தப் போட்டி புற்றுநோய் நிதி சேகரிப்புக்கான போட்டியாக நடைபெறவுள்ளது. தம்புள்ளை அணி உரிமையாளரின் சிந்தனைக்கு அமைவாக இரு அணிகளும் இந்தப் போட்டியில் மோதுகின்றன. அத்தோடு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டும் தமது பங்களிப்பை செய்வதாக அறிவித்துள்ளது.

அணி விபரம்

காலி அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது. தம்புள்ளை அணி சார்பாக நுவனிது பெர்னாண்டோ நீர்க்கப்பட்டு இப்ராஹிம் ஷர்டான் இன்று விளையாடுகிறார்/

கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, பிரபாத் ஜயசூரிய, இசுரு உதான,கவிந்து நதீஷான்

தம்புள்ள சிக்சேர்ஸ் – இப்ராஹிம் ஷர்டான், குஷல் ஜனித் பெரேரா, மொஹமட் நபி, மார்க் சப்மன், சமிந்து விக்ரம்சிங்கே, துஷான் ஹேமந்த, டில்ஷான் மதுசங்க , ரீஷா ஹென்றிக்ஸ்,லஹிரு உதார, நுவான் பிரதீப், நுவான் துசார

அவனுடைய உச்சரிப்பு ஏன் தவறு என்பதனை புரிந்த பின்னர் அதனை யோசிக்க தேவையில்லை. அத்தோடு ஏனைய விடயங்கள் மூலம் அவன் புள்ளிகளை அதிகரிக்க முடியும். ஆக ஏனைய போட்டியாளர்களோடு சக போட்டியாளனாக நிற்பான். விசேட கவனிப்பு தேவையில்லை.

Social Share

Leave a Reply