தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று(24.07) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும்.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 9 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று(24.07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.