அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம் நாளை(26.07) திங்கட்கிழமை ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 16ம் திகதி நிறைவடைந்திருந்தது.
மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட கல்விச் செயற்பாடுகள் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.