
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் “சூர்யா 44” திரைப்படத்தின் காட்சிகள் கேரளா மாநிலத்தின் இடுப்பி பிரதேசத்தில் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுவருகின்ற நிலையில், இதற்கு முந்தைய கட்ட படப்பிடிப்பு ஊட்டி பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதன் போது இப்படத்தில் வரும் குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை ஸ்ரேயா நடனம் ஆடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்பாடலை நடன இயக்குனர் ஷெரிப் இயக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இடம்பெற உள்ளதோடு, இத்திரைப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கல் அல்லது சித்திரைப் புத்தாண்டு அன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.