
இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய 9வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்காக அனுரகுமார திசாநாயக்கவுககு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பதிவினூடாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் மற்றும் சாகர் கொள்கைகளில் இலங்கை விசேட இடத்தினைக் கொண்டுள்ளது. நமது மக்களினதும் இப்பிராந்தியம் முழுவதினதும் நலன்களுக்காக நம்மிடையேயான பன்முக ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்குவதற்காக உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.’’ எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.