இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு வாகனமொன்றை அரசுடைமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
போலியான தகவல்களைச் சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து இந்த வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், இதனூடாக அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பதுளை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்த அதிசொகுசு ஜீப் ரக வாகனமே இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.