அரிசி விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரிக்கை

அரிசி விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரிக்கை

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே அரிசி தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேசிய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட நுகர்வோர் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

எவ்வாறாயினும், கட்டுப்பாட்டு விலையை மீறும் அரிசி விற்பனையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Social Share

Leave a Reply