
2024 ஆம் ஆண்டின் முதல் 09 மாதங்களில் 15 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 70 பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்ட்டுள்ளதாகவும், இவர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள் எனவும் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. கடந்த வருடத்தின் 9 மாதங்களில் மொத்தமாக 600 இற்கும் மேற்பட்ட எய்ட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுளளதாகவும், அவர்களில் 35 பேர் இறந்துள்ளதாகவும் தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் நோய் தடுப்பு வேலைத்திட்டம் அறிவித்துள்ளது. இளைஞர்களுக்கு 8 இற்கு 1 என்ற வீத்தில் தொற்று ஏற்படுவதாகவும், 2023 ஆம் ஆண்டிலும் பார்க்க எய்ட்ஸ் தொற்று அதிகரித்துள்ளதாகவும் மேலும் குறித்த நிறுவனம் தகவல் வழங்கியுள்ளது.
2023 ஆண்டின் வருடம் முழுவதும் 485 தொற்றுக்கள் பதிவாகிய நிலையில் 15 தொடக்கம் 24 வயதுகுக்கு உட்பட்டவர்கள் 25 மாத்திரமே. அவர்களில் 23 ஆண்கள். இதன்படி 2024 ஆம் ஆண்டு இது 27% அதிகரிப்பு என மேலும் கூறப்பட்டுள்ளது.