இரண்டாவது டெஸ்டிலும் தடுமாறும் இலங்கை

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இன்று(26.02) ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. முதல் நாள் நிறைவில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடி வரும் இலங்கை அணி 90 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றுள்ளது. குஷல் மென்டிஸ் 59 ஓட்டங்களுடனும், லஹிரு குமார ஓட்டங்களின்றியும் ஆடுகளத்தில் காணப்படுகின்றனர்.

டினேஷ் சந்திமால் 74 ஓட்டங்களையும், திமுத் கருணாரட்ன 36 ஓட்டங்களையும், ரமேஷ் மென்டிஸ் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பத்தும் நிஸ்ஸங்க 11 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 1 ஓட்டத்தையும், கமிந்து மென்டிஸ் 13 ஓட்டங்களையும் பெற்றனர். தனஞ்சய டி சில்வா முதற் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், நேதன் லயோன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்கள். மத்தியூ குனேமன் 2 விக்கெட்களையும், ட்ரவிஸ் ஹெட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

திமுத் கருணாரட்ண இன்று தனது நூறாவது போட்டியில் களமிறங்கினார். இது அவரின் கடைசிப் போட்டியும் கூட. போட்டி ஆரம்பத்தின் போது அவுஸ்திரேலியா வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினார். அத்தோடு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டும் சிறப்ப மரியாதை நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது .

Social Share

Leave a Reply