மெக்சிகோவின் குவானாஜுவாடோ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தின்போது சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து மெக்சிகன் பாதுகாப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.