முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி ஜனாதிபதி மன்னிப்பில் விடுதலையாகிய விடயம் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது. அண்மையில் ஜனாதிபதி மன்னிப்பில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமையில் ஊழல் இடம்பெற்ற விடயம் சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த விடயங்கள் தொடர்பில் பதவி நீக்கப்பட்டுள்ள முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் துஷார உப்புல்தெனியவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நேற்று(26.06) நடைபெற்ற இந்த வழக்கின் போது, முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் விடுதலையும், ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 பெண்களைக் கடத்தி கொலை செய்ததற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறை வைக்கப்பட்டிருந்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடமிருந்து ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்ற அவர் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார்.
இந்த விடுதலை சர்வதேச மகளிர் தினத்துடன் தொடர்புடைய மன்னிபின் கீழ் வழங்கப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
மேலே புகைப்படத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் காணப்படுகின்றனர்.