குறைந்த நிறையுடைய சிறுவர்களை கொண்ட பட்டியலில் இலங்கை

குறைந்த நிறையுடைய சிறுவர்கள் காணப்படும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி 5 வயதுக்கு குறைந்தவர்களில் உயரத்திற்கு ஏற்ற நிறை காணப்படாதவர்களே உலக சுகாதார ஸ்தாபனத்தினால் குறைந்த நிறையுடையவர்களாக கருதப்படுகின்றனர்.

இதனை தொடர்ந்து, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் இலங்கை மற்றும் இந்தியாவில் குறைந்த நிறையுடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பப்புவா நியூகினியா, மாலைதீவு, இந்தோனேஷpயா ஆகிய நாடுகளிலும் இதே நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று பரவல் காரணமாக குறித்த நாடுகளில் குறைந்த நிறையுடைய சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், உணவு பாதுகாப்பு மற்றும் போசனைக் குறைபாடு காணப்படுகின்ற நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை உணவுப் பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறைந்த நிறையுடைய சிறுவர்களை கொண்ட பட்டியலில் இலங்கை

Social Share

Leave a Reply