இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் பதிவேற்றம் செய்ய மத்திய கலாசார நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய குறித்த தகவல்களை WWW.CCF.GOV.LK என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் மூழ்கிய 101 கப்பல்கள் மற்றும் 6 விமானங்கள் தொடர்பான விரிவான தகவல்களை பொதுமக்கள் பெற முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.