தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது மற்றும் சட்ட திருத்தங்கள் தொடர்பான ஆவணம் தயாரிப்பதற்கான கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் அதன் இறுதி ஆவணம், நாளைய தினம் நிறைவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய தினம் கொழும்பில் இந்த திட்டத்தில் பங்குபற்றுகின்ற கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இடம்பெறுமெனவும் அந்த சந்திப்பில் இறுதி வரைபு முடிவு செய்யப்படுமெனவும் நம்பப்படுகிறது.
குறித்த ஆவணம் தயாரிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 21 ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் நடைபெற்றது. அன்றைய தினம் இறுதி ஆவணம் கைச்சாத்திடப்படுமென அறிவிக்கப்பட்ட போதும், ஆவண விடயங்கள் தொடர்பில் மாற்றங்கள் தேவைப்படுகின்ற அதேவேளை, திருத்தங்கள் செய்யப்படவேண்டுமெனவும் முடிவு எடுக்கப்பட்டு திருத்த வேலைகள் மீண்டும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையிலேயே நாளைய தினம் ஆவணம் நிறைவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சிகள் இணைந்து செயற்படுவது தொடர்பிலும், இந்த ஆவணம் தயாரிப்பது தொடர்பிலும் சுமூகமான நிலையில் நடவடிக்கைகள் இடம்பெறவில்லையெனவும், கடும் வாக்குவாதங்களும், வார்த்தை பிரயோகங்களும் பரிமாறப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது. சிக்கல் நிலைகளுக்கு மத்தியிலேயே இந்த ஆவணம் நிறைவுக்கு வருவதாக தெரிய வந்துள்ளது.
தொடர்புடைய செய்தி
