கடந்த 9 நாட்களில் மொத்தம் 86 பேர் வரை வீதி விபத்துகளால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து இதுபற்றி விளக்கமளிக்கையில், கடந்த இரு தினங்களில் மாத்திரம் 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முதலாம் திகதி (01/01) மாத்திரம் 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் மூவர் நேற்று (02/01) மாத்திரம் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 2021ஆம் ஆண்டில் 2,365 வீதி விபத்துகள் பதிவானதில் 2,461 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
