விளையாட்டு அமைச்சருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு.

விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரத்தில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக ரொஷான் ரணசிங்க முறைப்பாடு செய்திருந்தார். அத்தோடு பாதுகாப்பை அதிகரிக்குமாறு பொது பாதுக்காப்பு அமைச்சிடம் கோரிக்கை முன் வைத்திருந்தார். அந்த கோரிக்கைக்கு பொது பாதுக்காப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ள நிலையில் 7 பேராக காணப்பட்ட அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

இதேவேளை தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் சுதத் சந்தரசேகர ஆகியோரினால் விடப்பட்தாகவுவம், பாராளுன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ள அதேவேளை இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த அச்சுறுத்தல் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

பணத்தின் மூலமாக இவர்கள் விலைக்கு வாங்காத யாருமே இல்லை. பாராளுமன்றத்திலும் பலர் இவர்களுக்கு எதிராக காணப்படுகின்றனர். டுபாய் சென்ற வேளையிலும் போதை பொருளை தனது பயணப்பைக்குள் இட்டு தன்னை மாட்டிவிட முயற்சி செய்ததாகவும் மேலும் கூறியுள்ளார்.

இவர்கள் போட்டிகளை தோற்பதற்காக பந்தயம் கட்டுப்பவர்கள் எனவும், க்ரொஸ் பெட்டிங் எனும் ஒரு வருடத்துக்கு மேலால திட்டமிட்டு செயற்படுத்தப்படும் சூதாட்டம் எனவும் மேலும் பாராளுமன்றத்தில் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply