சுற்றுலாத்துறைக்கு அடித்த யோகம்

கடந்த வார இறுதியில் உள்நாட்டு பூங்காக்கள் ஊடாக நாட்டுக்கு 93 இலட்சத்து 31 ஆயிரத்து 820 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நீண்ட வார இறுதி விடுமுறையின் போது அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் பூங்காக்களை பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த 16ஆம் திகதி 23 ஆயிரத்து 342 உள்ளாட்டு சுற்றுலா பயணிகளும், 425 வெளிநாட்டு சுற்றுலா பயணிளும் பூங்காக்களை பார்வையிட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த தினத்தில் மாத்திரம் 8 இலட்சத்து 59 ஆயிரத்து 840 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறைக்கு  அடித்த யோகம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version