கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் பணிபுரியும் பொது சுகாதார ஆய்வாளர்கள் 6 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதென சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் சுகாதார பிரிவுகளிடம் சுட்டிக்காட்டியிருந்த போதும், இந்த விடயம் தொடர்பில் பெரிதாக ஒருவரும் கண்டுகொள்ளவில்லை எனவும், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் சுகாதார பாதுகாப்பை மீறி செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.