தமிழர் விடுதலை கூட்டணியை அபகரிக்க திட்டம்

தமிழர் விடுதலை கூட்டணியை அபகரிக்க ஒரு குழு திட்டமிட்டு செயற்படுவதாக அந்த கட்சியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு குழு தன்னை பற்றியும், கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதோடு, நாளைய தினம் நடவடிக்கை குழுவை கூட்டுவதோடு, 29 ஆம் திகதி கூட்டமொன்றை கூட்டி அதில் பொறுப்புகளுக்கான நியமனங்களை வழங்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ள ஆனந்தசங்கரி இது சட்டவிரோத கூட்டம் என தெரிவித்துள்ள அதேவேளை, இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது சட்டவிரோத செயற்பாடாகும் எனவும் தெரிவித்துள்ளார். அத்தோடு எவரையும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டாமெனவும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த செயற்பாடுகளில் ஈடுபடும் மோசடி குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மோசடி குழுவினரை மக்கள் நம்பவேண்டாமென தமிழர் விடுதலை கூட்டணி செயலாளர் நாயகம் வேண்டுகள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணியை அபகரிக்க திட்டம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version