‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் – ரஞ்சனிடம் வாக்குமூலம்

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காக, சிறைச்சாலையிலுள்ள தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் கோரிக்கைக்கு அமையவே இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

‘பண்டோரா பேப்பர்ஸ்’ தொடர்பிலான விசாரணைகளுக்காக நிருபமா ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரிடம் மாத்திரமே இதுவரை வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகளுக்காக உள்நாட்டு வணிக வங்கிகள், அரச வங்கிகள் மற்றும் வரி வருமான திணைக்களத்திடம் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.

சர்வதேச அரசியல் தலைவர்கள் மற்றும் கோடீஸ்வரர்களின் இரகசிய கொடுக்கல், வாங்கல் அடங்கிய பட்டியலில் இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவரான வர்த்தகர் திருக்குமார் நடேசன் ஆகியோரது பெயர்களும் வெளியாகியிருந்தன. அந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.

‘பண்டோரா பேப்பர்ஸ்' விவகாரம் - ரஞ்சனிடம் வாக்குமூலம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version