மின்தடை இல்லை ஜனாதிபதி தலையிட்டார்

மின்தடை இன்றைய தினம் இல்லையென மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொக்குகே அறிவித்துள்ளார். இலங்கை மின்சாரசபை இன்று மின் தடை அமுல் செய்யப்படுமென அறிவித்த சில மணி நேரங்களில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும், மின்சாரத்துறை அமைச்சருக்கிடையிலான கலந்துரையாடலின் அடிப்படையில் மின் துண்டிப்பு இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரசபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கவேண்டிய நிலுவையினை செலுத்த 93 பில்லியன் ரூபா பணத்தினை உடனடியாக வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை மூலம் மின்தடைக்கு நிறைவு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

மின்தடை இல்லை ஜனாதிபதி தலையிட்டார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version