சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது

பொரலந்த – ஹிம்புட்டுவெல்லதோவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞரும் அதற்கு உடந்தையாக செயற்பட்ட அவரின் தாயாரும் குடாஓயா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் காதலனே இவ்வாறு அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி கடந்ந 22ஆம் திகதி தனியார் வகுப்புக்குச் செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து சென்றுள்ளதுடன் மீண்டும் அவர் வீட்டுக்கு வருகை தராததால் அதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, அவர் எதிலியவௌ, தெலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த தனது காதலனுடன் சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குடாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version