பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு ஊழியர்கள், கடுமையான ரீதியிலும், முறையற்ற கெடுபிடிகளை செய்து வருவதாகவும் மக்கள் வழங்கிய குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும், குறிப்பாக பதுளை மாகாணம் தவிர்ந்த நாடலாவிய ரீதியில் பல பாகங்களிலிருந்தும் வரும் பெருந்தோட்ட மற்றும் பொது மக்களும் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குகின்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் பதுளை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
பதுளை பொது வைத்தியசாலை பணிப்பாளரை தொடர்புகொண்டு நோயளர்களை பார்வையிட வரும் பெருந்தோட்ட, மற்றும் பொது மக்கள் சரியாக வழிநடத்தபடவேண்டும் எனவும் எல்லோருக்கும் பொதுவான நியாயமான வழிமுறைகளை முன்னெடுக்கபடவேண்டுமெனவும் கடிதம் மூலமும் தொலைபேசியூடாகவும் வைத்தியசாலை பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்குமாறும் அரவிந்தகுமார் பணிப்புரை வழங்கியிருந்தார்.
பாரளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு செவிசாய்த்து பொது மக்களின் அசௌகரிய செயற்பாடுகள் இனிவரும் காலத்தில் நடைபெறாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கடமையில் ஈடுபாடும் உத்தியோகஸ்தர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, எதிர்காலத்தில் பொது மக்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பதுளை பொது வைத்தியசாலை பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாருக்கு பதில் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார்.