பெருந்தோட்டங்களில் காணப்படும் வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் கீழ் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (25/01) தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 450 வைத்தியசாலைகளில் முதல் கட்டமாக 59 வைத்தியசாலைகளை பொறுப்பேற்க சுகாதார அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெருந்தோட்டங்களில் காணப்படும் வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் கீழ் பொறுப்பேற்பது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, பெருந்தோட்டங்களில் காணப்படும் மருந்தகங்கள் மற்றும் வைத்தியசாலைகளை அரசிற்கு பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.